ஐயப்பன் கோயிலில் ஆருத்ரா பூஜை
திண்டுக்கல்லில் திருவாதிரையை முன்னிட்டு கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் ஏறாளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-30 08:57 GMT
ஆருத்ரா தரிசனம்
செந்துறை குரும்பபட்டி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆருத்ரா பூஜை, உலக நன்மை வேண்டி நடந்த குத்து விளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஐயப்ப சுவாமிக்கு வண்ண பூ மாலைகள் அணிவிக்கப்பட்டு 16 வகை திரவிய அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் , கணபதி ஹோமமும், அன்னதானம் வழங்கப்பட்டது. நிலக்கோட்டை கொங்கர்குளம் ஆருத்ர லிங்கேஸ்வரர் மீனாட்சியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்தில் நடராஜர் காட்சியளித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.