மாணவன் மீது தாக்குதல்: காவலர் மீது புகார்
மாணவன் மீது தாக்குதல் சம்பவத்தில் காவலர் மீது புகார் அளிக்கப்பட்டது.
போரூர் விக்னேஸ்வரா பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்தில் சன்ஜெய் (17) என்ற பள்ளி மாணவன் பயணித்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலைய காவலர் விஜயகுமார் என்பவர் தனது மகன் பேருந்தில் பயணித்த போது தகாத வார்த்தையில் பேசி கன்னத்தில் முகத்தில் அடித்து நெஞ்சில் குத்தியும் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அடிபட்டு கீழே விழுந்ததால் தனது மகனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருவதாகவும் எனவே தனது மகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவருடைய தந்தை ரஹீமா என்பவர் போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.