முன் விரோதத்தால் தாக்குதல் - 8 பேர் மீது வழக்குப்பதிவு

ஆவுடையாபுரத்தில் விபத்தில் மகன் இறக்க காரணமாக இருந்த இளைஞர் மற்றும் தடுக்க வந்தவர்களை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-01-19 04:24 GMT

காவல் நிலையம் 

விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் அந்த மன்னார்கோட்டை பகுதியில் மளிகை கடை வைத்த நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே பகுதியை சார்ந்த மணிகண்டன், இவருடைய மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது அந்த விபத்திற்கு காரணம் கதிரேசனின் மகன் அஜித் பாண்டி தான் எனக் கூறி அவரை மணிகண்டனின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுப்பதற்கு அங்கு சென்ற கதிரேசன் மற்றும் மகேஸ்வரன் வேல்பாண்டி கருப்பசாமி ஆகிய ஐந்து நபர்களையும் மணிகண்டன் வாழவந்தான், காளீஸ்வரன், சரவணகுமார்,முத்துலட்சுமி ராஜலட்சுமி செல்வராணி லதா ஆகிய எட்டு நபரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஐந்து நபர்களும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வச்சக்காரப்பட்டி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News