சேலம் புதுரோட்டில் துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வீடு புகுந்து ரூ.8 லட்சம் திருட்டு
சேலம் புதுரோட்டில் துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வீடு புகுந்து ரூ.8 லட்சம் திருடிய வாலிபர் கைது ரூ.5.5 லட்சம் பறிமுதல்
Update: 2024-02-29 04:48 GMT
சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், ரியல் எஸ்டேட் அதிபர், இவரது வீட்டிற்குள் கடந்த 24-ந் தேதி மர்ம நபர் ஒருவர் புகுந்தார் . அப்போது சிவகுமார் வீட்டில் இல்லை. அவரது 80 வயதான தாய் மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் அரணை புகுந்ததாக கூறிய நபர் வீடு முழுவதும் தேடுவது போல நடித்தார். பின்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொண்ட அந்த வாலிபர் வீட்டில் பீரோவில் இருந்த 8 லட்சம் ரூபாயை எடுத்து சென்று விட்டார். வெளியில் சென்றிருந்த சிவகுமார் வீட்டிற்கு வந்த போது பீரோ திறந்து கிடந்ததால் இது குறித்து தாயாரிடம் கேட்டார். அப்போது வாலிபர் ஒருவர் வந்தாகவும், அவர் தான் பீரோவை திறந்ததாகவும் கூறினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த சிவக்குமார் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அங்கிருந்த கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடி சென்றது சேலம் சண்முகாநகர் பகுதிைய சேர்ந்த முகமது ஜபருல்லா (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் மீதம் உள்ள ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தையும் செலவு செய்ததாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.