ஆத்தூர் : கட்சி நிர்வாகிகளை சந்தித்த அதிமுக வேட்பாளர் குமரகுரு
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு ஆத்தூரில் அதிமுக அலுவலகத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார்
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நகர செயலாளர் மோகன் ஏற்பாட்டில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, இனிப்பு வழங்கினார்கள்.
பின்னர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் குமரகுரு கட்சி நிர்வாகிகள் இடையே பேசிய போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நமது பொதுச் செயலாளர் கரத்தை வலுப்படுத்த நமது தொகுதியில் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்களும் தொண்டர்களும் வெற்றிக்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்றும் நமது தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நமது கட்சியின் பொதுச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் இதனால் அனைவரும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் கழகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மோகன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்