அமைதி அறக்கட்டளை அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைதி அறக்கட்டளை அலுவலகத்தில் போதையில்லா பாரதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறை, மாவட்ட காவல் துறை ,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,கல்வி நிறுவனங்கள் மற்றும் சகி ஒருங்கிணைந்த பெண்கள் பாதுகாப்பு மையம் ஆகிய இடங்களில் போதையில்லா பாரதம் குறித்த விழிப்புணர்வு தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை, அமைதி அறக்கட்டளை மற்றும் ரோஜா வனம் நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்றது.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புஷ்பகலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன், நன்னடத்தை அலுவலர்கள் ஜோதிமணி, பாதுகாப்பு அலுவலர் சக்திவேல்,சகி ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராணி மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர்களின் முன்னிலையிலும் கருத்துக்கள் வழங்கி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி கோசங்களுடன் உறுதி மொழி எடுக்கப்பட்டது.