ஆட்சி மொழி சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்டவார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Update: 2023-12-19 07:21 GMT
பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்டவார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் துவங்கிய பேரணியை ஆட்சியர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரணி நிறைவு பெற்றது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தமிழ் மொழி குறித்தும், தமிழ் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியில் துறை சார்ந்த அலுவலர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் திரளாக பலர் கலந்து கொண்டனர்.