திருவாரூரில் ஆட்சி மொழி சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி

Update: 2023-12-19 04:07 GMT

விழிப்புணர்வு பேரணி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்டவாரம் 2023 முதல் 2024 ஆம் ஆண்டு குறித்த விழிப்புணர்வு பேரணியினை கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சி மொழி சட்டவார விழாவின் முதல் நிகழ்வான விழிப்புணர்வு பேரணி திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் திருவிக அரசு கலைக்கல்லூரி, ராபியம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News