பெண் காவலருக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு- நெகிழ்ச்சி சம்பவம்

பாரமபரபாரம்பரிய முறைப்படி சீர் செய்தனர்;

Update: 2023-12-08 06:44 GMT

காவலருக்கு வளைகாப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் இந்து பிரியா.எட்டு மாத கர்ப்பிணியான பிரியாவுக்கு வளைகாப்பு நடத்த உடன் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஆய்வாளர் சுமதி ஆகியோர் முடிவெடுத்து காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.பத்து வகையான உணவுகள் தயாரிக்கபட்டு வளையல்யிட்டு பாரம்பரிய முறைப்படி சீர் செய்யட்டது.வளைகாப்பு நிகழ்வை கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி முன்னின்று நடத்தி வைத்தார்.

Advertisement

அப்போது சூலூர் காவல் நிலையத்து வந்திருந்த மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் மகளிர் காவல் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து அங்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.உள்ளே நுழைந்ததும் கர்ப்பிணி காவலர் பிரியாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வாழ்த்து தெரிவித்தார்.மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களே சக காவலருக்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News