வைக்கல்லூர் ஆற்றில் தடுப்பு சுவர் : கலெக்டர் பார்வை
பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் தாமிரபரணி ஆற்றுப் படுகைக்குட்பட்ட வைக்கலூர், ஆற்றங்கரை பகுதியில் அமைந்திருந்த 2 வீடுகள் சேதமடைந்து சாலைகள் அரிப்பு ஏற்பட்டது. இதன் அடிப்படையில், ஆற்றோர பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் நீர்வளம் ஆதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தற்காலிகமாக சரி செய்வதற்காக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொல்லங்கோடு நகராட்சி பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.35 இலட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டார். நடைபெற்ற ஆய்வில் சப் கலெக்டர் கவுஷிக், மகளிர் திட்ட இயக்குநர் பாபு, நீர்வளத்துறை உதவி பொறியாளர் மெல்கின், கிள்ளியூர் வட்டாசியர் அனிதா குமாரி, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.