பெயர் பலகை மீது பைக் மோதல் - வாலிபர் பலி
மெஞ்ஞானபுரத்தில் பஞ்சாயத்து பெயர்பலகை மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். ;
Update: 2024-04-02 01:59 GMT
பைல் படம்
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மகாதேவன் (21). இவர் நேற்று இரவு இசக்கி அம்மன் கோவில் ரோட்டில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த பஞ்சாயத்து பெயர் பலகை மீது பைக் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மகாதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.