பாஜக வேட்பாளர் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் நடைப்பெற்ற பாஜக வேட்பாளர் ஆலோசனை கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார்.

Update: 2024-03-29 04:38 GMT
ஆலங்குளத்தில் பாஜக வேட்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நேற்று மாலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற பாரதிய ஜனதா குழு தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் தற்போது நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். இதில் தென்காசி நாடாளுமன்ற வேட்பாளர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News