கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் - 184 காங்கிரசார்  மீது வழக்கு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 184 பேர் காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-03-01 07:54 GMT
பைல் படம்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸார் நேற்று முன்தினம் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநகர் காங்கிரஸ்  தலைவர் நவீன் குமார் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டு, கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.       

இதேபோல் குழிறையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமையில்  போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் கைது செய்யப்பட்டு,  களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மனவளக்குறிச்சியில் நடந்த மறியல் போராட்டத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம் உட்பட 64 பேரை போலீசார் கைது செய்து மனவளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.        கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மூன்று இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 184 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News