கீழ்பென்னாத்தூர் நகர அ.தி.முக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

Update: 2023-11-19 05:29 GMT

ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் நகர அ.தி.மு.க சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு நகர செயலாளர் ஓ.சி.முருகன் தலைமை தாங்கினார். நகர அவைத் தலைவர் பாண்டுரங்கன், முன்னாள் நகர செயலாளர் கட்டையகண்ணன், நகர இணை செயலாளர் சிவராமன், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது, கீழ்பென்னாத்தூர் நகர அ.தி.மு.க பூத் கமிட்டி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே மாவட்டத்தில் மற்றவர்களை காட்டிலும் விரைவாக செய்து முடித்ததற்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று கட்சி பணிகள், தேர்தல் பணிகளில் விறுவிறுப்புடன் பணியாற்றுவதற்கு உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற 6வது மாதத்திலேயே மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 1/2ஆண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சிறப்பான ஆட்சி நடப்பது போன்ற மாயத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த எடப்பாடி தலைமையிலான அ.தி. மு.க ஆட்சியில் மக்களுக்கு  தேவையானவற்றை  நிறைவேற்றி சிறப்பான ஆட்சி நடத்தினார். ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. இதனால் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியதன் காரணமாக வருகிற நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தமிழ்நாடு, பாண்டிச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பெறுவதில் சந்தேகம் இல்லை. எனவே பூத் கமிட்டி முகவர்கள் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். இதைத் தொடர்ந்து 2026ல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க நல்லாட்சி அமைந்து மக்களுக்கு நல்லாட்சி புரிந்திட அனைத்து அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றுபட்டு திறம்பட பணியாற்ற வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், மாநில அமைப்பு செயலாளரான வி. ராமு,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், கீழ்பென்னாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ; ஏ.கே. அரங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு தேர்தல்களில் எவ்வாறு பணியாற்றி வெற்றி வாய்ப்பை பெறுவது குறித்த ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் சாந்தி கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய மாணவரணி செயலாளர் மோகன், தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ராஜபாண்டியன்,வட்ட செயலாளர்கள, பிற அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவைத் தலைவர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News