புதுக்கடை:தொடர் மழையால் குளத்தின் சுவர் உடைப்பு - சரிசெய்ய கோரிக்கை

Update: 2023-11-10 05:30 GMT

குள சுவரில் உடைப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் பைங்குளம் ஊராட்சியில் ஊற்றுக்குழி, பொட்டகுளம் அமைந்துள்ளது. சுமார் 25 சென்ட் பரப்பளவு கொண்ட இந்த குளத்திற்கு சுற்றுப் பகுதி வடிகால் ஓடைகளிலிருந்து வரக்கூடிய தண்ணீரும், கால்வாய்களில் இருந்து வரும் தண்ணீரும் இந்த குளத்தில் எளிதில் தேங்குவது வழக்கமாகும். இதனால் இந்த குளம் எப்பொழுதும் தண்ணீர் நிரம்பிய நிலையில் காணப்படும். தற்போது இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இங்கு உள்ள நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்து வருகிறது. இதனால் இந்த குளமும் நிரம்பி வழிந்து உள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் திடீரென இந்த குளம் உடைப்பெடுத்தது. இதனால் இந்த குளத்தினுடைய பக்க சுவர் உடைந்து, குளத்தின் கரையில் உள்ள முன்னாள் ஊராட்சி துணைத் தலைவருடைய வீடு வரை தண்ணீர் சென்றுள்ளது. மேலும் மழை நீடித்தால் வீடுகள் சேதமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகவே அரசு உடனடியாக உடைப்படுத்த இந்த பகுதியில் குளத்தின் உடைப்பை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags:    

Similar News