வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
இரணியல் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் தங்கையா நாடார் மகன் பிரைட் (42). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 11ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசிக்கும் தனது தனது தம்பி வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் பிரைட் குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு, உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவன் தங்க நகை மற்றும் ரூபாய் 9 ஆயிரத்து 600 ஆகியவை மாயமாகி இருந்தது. வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து பிரைட் இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.