கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-03-28 16:43 GMT

வாக்குசேகரிப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்தில் திமுக கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் திறந்தவெளி ஜீப்பில் கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி ஒன்றிய மற்றும் பேரூர் பகுதிகளான டிபி ரோடு, பச்சக்காடு, ஈரோடு பிரிவு ரோடு, சன்னியாசிபட்டி, உட்பட சுமார் 80க்கும் மேற்பட்ட சிற்றூர் கிராம பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில்உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு சென்றபோது பெண்கள் ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அவர் பேசும்போது ஏற்கனவே கடந்த எம்பி தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்ராசு போலவே தானும் வெற்றி பெற்று நேர்மையாக பணியாற்றுவேன் என்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது சங்ககிரி ஒன்றிய திமுக செயலாளர் ராஜேஷ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், சரவணன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடன்னிருந்தனர்.

Tags:    

Similar News