காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரசாரம் - விவசாயிகள் சங்கம் தீர்மானம்

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-04-05 08:07 GMT

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கிழக்கு பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேல வழுத்தூரில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பாபநாசம் ஒன்றிய மகளிர் அணி துணை செயலாளர் .சித்தாலெட்சுமி வரவேற்று பேசினார். பாபநாசம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் .கவிதா .முன்னிலை வகித்தார் கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார் மாவட்ட செய்தி தொடர்பாளர் பாஸ்கர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செந்தில் குமாரி கும்பகோணம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் .ரஞ்சிதம் மற்றும் நிர்வாகிகள் தமிழ்செல்வி.,கீதா செல்வி லல்லி விக்னேஷ். மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள் .

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது வரும். ஏப்ரல் 19 நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா திமுக கூட்டணியை ஆதரிப்பது என்றும் அதன் படி மயிலாடுதுறை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளராக. போட்டியிடும் வேட்பாளர். வழக்கறிஞர் சுதாவை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது, கும்பகோணம் மானமதுரை நெடுஞ்சாலையில் பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும், பாபநாசம் வட்டம் கருப்பூர் குடிகாடு ராமநல்லூர் கொள்ளிட ஆற்றில் தமிழக அரசு உடனடியாக உயர் மட்ட மேம் பாலம் கட்ட வேண்டும், கும்பகோணம் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் திருவையாறு செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் நெடுத் தெரு மற்றும் வழுத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் தாழக்குடி கொண்டம்வட்டம் திடல் காவலுர் பாசன வாய்க்கால்கள் நீண்ட ந தூர்வாரி மேலும் இந்த வாய்க்காலில் பைபாஸ் அருகில் உடனடியாக தடுப்பு அணை கட்டவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் செயற்குழு உறுப்பினர் அப்துல்லா நன்றி கூறினார் .

Tags:    

Similar News