காளைகளுக்கு ஆன்லைனில் பதிவு ரத்து: புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு

காளைகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை ரத்து செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-01-09 03:09 GMT

மனு அளித்தவர்கள்

 மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விழா கமிட்டியினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கறம்பக்குடி ஊராட்சி மாங்கோட்டை கிராமத்தில் கடந்த ஐந்து வருடங்களாக வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியை அந்த கிராம பொதுமக்கள் சார்பில் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இம்மாதம் 25ஆம் தேதி வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற அந்த கிராம பொதுமக்கள் சார்பில் விழா கமிட்டினர் ஆயத்தமாகினர். இந்நிலையில் தமிழக அரசு அந்த போட்டியில் பங்குபெறும் காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதில் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் 100 முதல் 1000 மாடுகள் வரை கலந்து கொள்வது வழக்கம், ஆனால் இந்த வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெறும் 14 மாடு மட்டுமே கலந்து கொள்ளும் போட்டியாக உள்ளது.

வெறும் 14 பேர் கலந்து கொள்ளும் இந்த போட்டிக்கு ஆன்லைன் பதிவு தேவையில்லை இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது. எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் விழா கமிட்டினர் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைந்திருக்கும் நாள் கூட்டத்தில் அந்த கிராம விழா கமிட்டியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News