காரும்-காரும் மோதி விபத்து - நான்கு பேர் படுகாயம்
முறையாக காரை நிறுத்தாததால், காரும்-காரும் மோதி விபத்து. நான்கு பேர் படுகாயம்.
Update: 2024-03-24 13:10 GMT
ஈரோடு மாவட்டம், சிவகிரி,தட்டாம் பாளையம் அருகே உள்ள பூசாரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி மனைவி திவ்யா வயது 26. இவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ரவி வயது 53, அவரது மனைவி கல்யாணி வயது 48, அருகிலுள்ள வடுகன் காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது 45. இவர்களுடன், இவர்களது உறவினர் கவின் பிரசாத் என்பவருடன் ஒரு காரில் மார்ச் மாதம் 20ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் திண்டுக்கல் - கரூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். காரை கவின் பிரசாத் ஓட்டி சென்றார். இவர்களது கார், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, கணவாய் அருகே உள்ள ரெங்கமலை ஆர்ச் அருகே வந்தபோது, அந்தப் பகுதியில் சாலையோரம் திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் வயது 27 என்பவர் அவரது காரை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் நிறுத்தி இருந்தார். அப்போது கவின் பிரசாத் ஓட்டிச் சென்ற கார், சந்தோஷ் குமார் நிறுத்தி இருந்த காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கவின் பிரசாத் ஓட்டிச் சென்ற காரில் பயணித்த திவ்யா, ரவி,கல்யாணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அனைவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, திவ்யா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் நிறுத்தி, விபத்து ஏற்பட காரணமான சந்தோஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.