பள்ளத்தில் விழுந்த கார் - உடல் கருகி ஒருவர் பலி
விருதுநகர் அருகே தரைப்பாலத்தில் மோதிய கார் பள்ளத்தில் உருண்டு விழுந்து தீப்பிடித்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.;
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் சேர்ந்தவர் சசிக்குமார் (55), இவரது மகன் ரோஹித். இவர்கள் இருவரும் ஒரு காரில் கன்னியாகுமரி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது விருதுநகர் அருகே துலுக்கப்பட்டி விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தரைப்பாலத்தில் திடீரென கார் மோதி பள்ளத்தில் உருண்டது.இந்த விபத்தில் கார் திடீரென தீப்பிடித்தது.
இதில் காரை ஓட்டி வந்த நபர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ரோகித் மற்றும் சசிகுமார் ஆகியோரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் உயிர் இழந்த கார் ஓட்டுநர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்