எம்எல்ஏ அலுவலகம் அருகே கார்கள் மோதல்: காவல்துறை வழக்கு பதிவு

கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ அலுவலகம் அருகே கார்கள் மோதிக்கொண்டது.;

Update: 2024-04-22 12:54 GMT

காவல் நிலையம்

எம்எல்ஏ அலுவலகம் அருகே கார்கள் மோதல். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட, அப்பிபாளையம் ரக்கிலா கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு வயது 56. இவர் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 11:30 மணியளவில், காக்காவாடி பிரிவு சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ அலுவலகம் அருகே சென்ற போது, அதே திசையில் பின்னால் வேகமாக வந்த,

Advertisement

கரூர் மாவட்டம், ராயனூர்,நேரு நகர் முதல் தெருவை சேர்ந்த பரணிதரன் வயது 35 என்பவர் ஓட்டி வந்த கார், திருநாவுக்கரசு ஓட்டி சென்ற காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திருநாவுக்கரசுக்கு லேசான உள் காயங்கள் ஏற்பட்டது. அதே சமயம் காருக்கும் சேதம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, பரணிதரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News