சாராயம் விற்ற 8 பேர்மீது வழக்கு

சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் சட்ட விரோதமாக மதுவிற்ற பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-01 00:40 GMT

கைது

சேலம் மாவட்டம்,  கெங்கவல்லி போலீசார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கெங்கவல்லியை சேர்ந்த வசந்தி, விஜியா மற்றும் 74 கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த லதா ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. மேலும் சங்ககிரியை சேர்ந்த சரவணன் என்பவர் கெங்கவல்லி டாஸ்மாக் பாரில் அனுமதியின்றி மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து மது விற்ற பெண்கள் உள்பட 4 பேர் மீது கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News