தம்பியைத் தாக்கிய அண்ணன் மீது வழக்கு
கள்ளகுறிச்சி அருகே குடும்பதகராற்றில் தம்பியை வெட்டிய அண்னன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Update: 2023-12-31 09:26 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் ஜி.எச்.நகரைச் சேர்ந்தவர் ராஜி மகன் குமார், 26; இவரது அண்ணன் சக்திவேல், 36; குமார் தனக்கு சொந்தமான ஜே.சி.பி., இயந்திரத்தை அவரது வீட்டின் முன் நிறுத்தி பூஜை போட்டார். பூஜைக்கு தன்னை அழைக்காததை கண்டித்து சக்திவேல், குமாரிடம் தகராறில் ஈடுபட்டு, கொடுவாளால் வெட்டினார். புகாரின்பேரில், சக்திவேல் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.