இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம்,எலியத்தூர் பகுதியில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-05-15 05:01 GMT
வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி அடுத்த எலியத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் கவுசல்யா, 27; தென்சிறுவள்ளூர் அய்யாசாமி மகன் மணிமாறன், 27; இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கவுசல்யா திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு மறுப்பு தெரிவித்த மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் புஷ்பராணி, ராஜா ஆகியோர் கவுசல்யாவை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மணிமாறன், புஷ்பராணி, ராஜா ஆகி யோர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.