திருமணஞ்சேரியில் தேரோட்டம்
கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.;
Update: 2024-05-22 06:14 GMT
தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருள, தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.