திருப்பூரில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் காசோலையை மேயரிடம் வழங்கல்
திருப்பூர் 3-வது வார்டு பகுதி பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மழைநீர் வடிகால் கட்டுவதற்கு 1.5 லட்சத்திற்கான காசோலை மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-24 12:33 GMT
காசோலை வழங்கல்
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு-3 அம்மன் நகர் பிரதான சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.4.65 இலட்சத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.1.55 இலட்சத்திற்கான காசோலையை அப்பகுதி மக்கள், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர்.உடன் துணை மேயர் பாலசுப்ரமணியம் , கருப்பசாமி கலந்து கொண்டனர்.