சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி திருப்பத்தூரில் முதன்மை நீதிமன்றம் திறக்க ஆய்வு!
திருப்பத்தூரில் மார்ச் 30க்குள் மாவட்ட முதன்மை நீதிமன்றம் திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி உறுதி!
Update: 2024-02-25 07:55 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது. இதனை மாவட்டம் முதன்மை நீதிமன்றமாக மாற்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஞானமோகன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி திருப்பத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று வருகை புரிந்து மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்ற திறப்பதற்க்கு முறையான முகாந்திரம் உள்ளதா என இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் அதற்கான முகாந்திரங்கள் இருப்பதின் காரணமாக வருகின்ற மார்ச் 30க்குள் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் திற்பதாக உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது