மின் தடை குறித்து தகவல் தெரிவிக்க நகரமன்ற தலைவர் கோரிக்கை

பள்ளிபாளையத்தில் அவ்வப்போது எதிர்பாராத விதமாக, மின்தடை ஏற்படுவதால், முறையான தகவலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நகர மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.

Update: 2024-06-15 13:03 GMT

பள்ளிபாளையத்தில் அவ்வப்போது எதிர்பாராத விதமாக, மின்தடை ஏற்படுவதால், முறையான தகவலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நகர மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது . மேலும் இடைவிடாத மின்வெட்டு ஏற்படுவதால் தொழில் பாதிப்புகள் ஏற்படுகிறது. விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு பாதிப்பினால் வீட்டில் உள்ள குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்த புகார் தொடர்ந்து பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத்திற்கு வரவே, பள்ளிபாளையம் சங்ககிரி சாலை ஒட்டமெத்தை பகுதியில் அமைந்துள்ள, பள்ளிபாளையம் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்த பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ் மற்றும் நகராட்சி பொறியாளர் ரேணுகா ஆகியோர் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏன் ஏற்படுகிறது என காரணங்களை கேட்டறிந்து, இனிவரும் காலங்களில் மின்வெட்டு முழுமையாக ஏற்படாத வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

எதிர்பாராத வகையில் ஏற்படும் மின்தடை தகவலை பொதுமக்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் அல்லது சிறு குறு தொழிலாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை இணைத்து whatsapp உருவாக்கி அதில் அவ்வப்போது தெரிவிக்க வேண்டுமென நகர மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்...

Tags:    

Similar News