வைராவிகுளம் ஊராட்சியில் வகுப்பறை திறப்பு விழா

திருநெல்வேலி மாவட்டம்,வைராவிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை ஒன்றிய குழுதலைவர் திறந்து வைத்தார்.

Update: 2024-02-18 05:41 GMT

வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஒன்றியம், வைராவிகுளம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் ரூ. 29 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரணி சேகர் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், உள்ளூர் பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News