தூய்மை பணியாளர்களின் மகள் தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி சேர்ந்த பேரூராட்சி அலுவலக தூய்மை பணியாளரின் மகள் விஷம் குடித்து தற்கொலை காவல்துறையினர் விசாரணை.
Update: 2024-04-16 06:20 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி போயர் தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் இவர் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகின்றார் இவருக்கு 15 வயதில் புனிதா என்ற மகள் உள்ளார். பூங்காவனம் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்த நிலையில் இவரது மகள் தட்டிக் கேட்டத்துடன் சண்டை போட வேண்டும் என்று கூறி வந்துள்ளார். அப்படி இருந்தும் கணவன் மனைவி இருவரும் தொடர்ந்து சண்டை போட்டு வந்த நிலையில் மனமடைந்த இவரது மகள் நேற்று வீட்டில் இருந்த விஷத்தை குறித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் பூங்காவனத்தின் மகள் புனிதா பரிதாபமாக இருந்தார் இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.