கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு
ஜோலார்பேட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-02-14 15:08 GMT
ஆட்சியர் ஆய்வு
திருப்பத்துர் மாவட்டம் கோடியூரில் உள்ள ஜோலார்பேட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு மனு கொடுக்க வந்தவர்களிடம் முறையாக கிராம நிர்வாக அலுவலர்கள் மரியாதை கொடுக்கிறாரா? உடனடியாக தீர்வு காணப்படுகிறதா எனவும் கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் கிராம நிர்வாக அலுவலர் துக்கனிடம் விசாரணை மேற்கொண்டு என்பது குறிப்பிடத்தக்கது