வாக்குசாவடிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை நாமக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-29 11:23 GMT
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் மக்களவை பொதுத்தேர்தல் 2024 மார்ச் 16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு, 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில் அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம், இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News