"கல்லூரி கனவு" நிகழ்ச்சி: ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அழைப்பு
"கல்லூரி கனவு" நிகழ்ச்சியில் பங்கேற்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
"கல்லூரி கனவு" நிகழ்ச்சியில் பங்கேற்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம்,
கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் 12-ம் வகுப்பு பயின்ற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, பள்ளி இறுதி ஆண்டில் தேர்ந்தெடுத்த பாடங்களுக்கு ஏற்ப உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பம் பதிவு செய்வதற்கான உயர் கல்வி நிறுவனங்களில் இணையதளம் முகவரி, விண்ணப்பித்தினை பதிவு செய்யும் முறை மற்றும் தேவையான சான்றிதழ்கள் குறித்த உரிய விளக்கங்களுடன்,
பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் "என் கல்லூரி கனவு" எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி வருகிற மே 20ஆம் தேதி அன்று காலை 9 மணியளவில் தாந்தோணி மலை அரசு கலைக்கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மேற்கண்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சியில்,
பள்ளி இறுதி ஆண்டு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன பிரிவை சார்ந்த அனைத்து மாணாக்கர்களுக்கும் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.