கோட்டக்குப்பத்தில் டாக்டரிடம் பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
கோட்டக்குப்பத்தில் டாக்டரிடம் பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது. போலீசார் விசாரணை.;
Update: 2024-04-05 05:27 GMT
3 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் திவான் கந்தப்ப நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சந்தோஷ் வயது 36. டாக்டரான ஆன சந்தோஷ் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராகவும் நரம்பியல் துறை உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் காலை பெரிய முதலியார்சாவடியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு நடந்து சென்றார். ஈ.சி.ஆர் சாலையில் நடந்து சென்ற இவரை பின்னால் பைக்கில் வந்த மூன்று பேர் மோதி கீழே தள்ளி விட்டனர். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த டாக்டர்.சந்தோசின் செல்போன் மற்றும் மணி பர்ஸ் சாலையில் விழுந்தது. பைக்கில் வந்த மூன்று பேரும் பர்ஸை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து டாக்டர் சந்தோஷ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சக்தி வழக்குப்பதிவு செய்து அரசு டாக்டர் இடம் பணப்பணப்பில் ஈடுபட்ட மூன்று பேரை பிடிப்பதற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் திவாகர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்தப் பகுதியில் இருந்த இருபதற்கு மேற்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் வைத்து பணப்பறிப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தனர். நேற்று காலை முக்கிய குற்றவாளியான கோட்டக்குப்பம் பெரியதெருவை சேர்ந்த பஷீர் மகன் நசீர் பாஷா வயது 21 பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கோட்டகுப்பம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த குமார் மகன் சாம்பசிவம் வயது 22, முருகன் மகன் கீர்த்தி வாசன் வயது 20 என மொத்தம் மூன்று பேரை கைது செய்து அவரிடமிருந்து டாக்டர் சந்தோஷிடம் பறித்த ரூபாய் 7500 பணம் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் பின்னர் மூன்று பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நசீர்பாஷா கடலூர் அரசு கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டும், சாம்பசிவம் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலமும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.