மகளிர்கான நீதி வேண்டி மாநாடு

ராமநாதபுரம் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மகளிர்க்கான நீதி வேண்டி மாநாடு நடந்தது.

Update: 2024-02-20 05:05 GMT

ராமநாதபுரம் மாவட்ட மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ராமலட்சுமி வரவேற்றார்.மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சுதா. இராமகிருஷ்ணன் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து பேச்சாளர் இலக்கியா ,ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன் இணைந்தார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், நகர் தலைவர் கோபி, வட்டாரத் தலைவர் காருகுடி சேகர், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாணி இப்ராஹிம், திருப்புல்லாணி சேது பாண்டியன். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில தலைவி சுதா இராமகிருஷ்ணன், மணிப்பூரில் பாலியல் கொடுமைக்கு நேரில் செல்லாமல் தவிர்த்துவந்தார். பெண்களுக்கு ஏராளமான கொடுமைகள் நடந்ததற்கு நரேந்திர மோடியே காரணம். டெல்லியில் விவசாயிகளை பார்க்க முடியாமல் அவர்கள் செல்லும் வாகனங்களில் பல்வேறு தடுப்புகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்ட பிரதமரும் மோடியே இவர்களால் பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இந்தியாவில் இல்லை பாரத் ஜோடோ யாத்திரை சென்ற ராகுல் காந்திக்கு முன்பு ஏராளமான பெண்கள் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறி கதறி அழுத காட்சி என் கண் முன்னே நிற்கிறது என்றார்.

Tags:    

Similar News