ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்
பெரம்பலூர் சாலையில் தேர்தல் நிலைக்குழுவினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ-80,000 பணம் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-05 07:40 GMT
பணம் பறிமுதல்
பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர், மற்றும் தேர்தல் நிலையான குழுவினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், இதில் பெரம்பலூர் அரியலூர் சாலையில் அல்லிநகரம் அருகே அரியலூரை சேர்ந்த ஷாபர்ருள்ள வயது 58, என்பவர் வந்த வாகனத்தை தேர்தல் நிலை குழுவினர் சோதனை செய்தபோது உரிய ஆவணம் இன்றி அவர் எடுத்துச் சென்ற ரூ 80,000 பணத்தை , தனி வட்டாட்சியர் தேன்மொழி, சமூக பதுகாப்பு திட்டம், மோகன்ராஜா , காவலர்கள் மீனா , கருணாகரன் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கைப்பற்றப்பட்டு, பணத்தை குன்னம் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.