பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் வருமானவரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கை முடக்கிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-31 05:24 GMT

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சீனிவாசகுமார் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் குலாம் மொய்தீன், விழுப்புரம் நகரத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலர் தயானந்தம் முன்னிலை வகித்தனர். கட்சியின் முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, ராஜ்குமார், நாராயணசாமி, நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ்ராம், மாவட்டப் பொதுச் செயலர் விசுவநாதன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஸ்ரீராம், எஸ்.சி. அணித் தலைவர் சேகர், மனித உரிமைப் பிரிவு மாவட்டத் தலைவர் வேலு, இளைஞர் காங்கிரஸ் விழுப்புரம் தொகுதித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News