நாமக்கல்லில் காங்கிரஸ் எஸ்சி. பிரிவு சார்பில் போராட்டம்..!

அம்பேத்கார் இயற்றிய, அரசியல் சட்டத்தை மாற்றி புதிய அரசியலில் அமைப்பு சட்டத்தை உருவாக்குவோம் என பாஜக எம்.பி. ஆனந்த் ஹெக்டே கூறியுள்ளார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-14 17:22 GMT
விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பாஜக வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் அம்பேத்கார் இயற்றிய அரசியல் சட்டத்தை மாற்றி புதிய அரசியலில் அமைப்பு சட்டத்தை உருவாக்குவோம் என பாஜக எம்.பி. ஆனந்த் ஹெக்டே கூறியுள்ளார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையொட்டி நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு சார்பில், பாஜக எம்.பி ஆனந்த் ஹெக்டேவின் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட எஸ்.சி பிரிவு தலைவர் பொன்முடி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், முன்னாள் மாணவர் காங்கிரஸ் செயலாளர் டாக்டர் பாலாஜி, முன்னால் எஸ்.சி பிரிவு மாவட்ட தலைவர் பொன்னையன், மாநில மகளிர் காங்கிரஸ் செயலாளர் மகேஸ்வரி, புதுச்சத்திரம் வட்டார தலைவர் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், ஜோதீஸ்வரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெரியசாமி, சேந்தமங்கலம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில், மேற்கு மாவட்ட எஸ்.டி பிரிவு தலைவர் சுதேஷ், ஜெகநாதன், கார்த்திக், பிரியா உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News