பறவைகள் பூங்கா அமைக்கும் பணி 50% நிறைவு - திருச்சி ஆட்சியா் தகவல்

திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்காவுக்கான பணிகள் 50 சதவிகிதம் முடிந்துள்ளன. முழு பணிகளும் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

Update: 2024-04-24 07:13 GMT

ஆட்சியர் ஆய்வு 

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கம்பரசம்பேட்டை (அய்யாளம்மன் படித்துறை) பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 13.70 கோடியில், 1.63 ஏக்கரில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட இப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது: பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இப்பூங்கா அமைக்கும் பணிகள் 50 சதவிகிதம் முடிந்துள்ளது. விரைவில் முழு பணிகளும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றாா்.
Tags:    

Similar News