நிதி நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்!
கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக நிதி நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-23 06:53 GMT
ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் அழகுசேனை ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்தவர் பெருமாள் (55). இவரது மனைவி லட்சுமி (47).பெருமாளுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடன்காரர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதன் எதிரொலியாக கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் நிதி நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பைனான்ஸ் நடத்தி வரும் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.