பள்ளிகளுக்கு குறிப்பாணை வழங்க மாநகராட்சி ஆணையா் உத்தரவு
கட்டட உறுதித் தன்மை குறித்து அறிக்கை அளிக்க திண்டுக்கல் பகுதியிலுள்ள 33 பள்ளிகளுக்கு குறிப்பாணை வழங்க மாநகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினாா்.;
Update: 2024-05-24 11:55 GMT
பள்ளிகளுக்கு குறிப்பாணை வழங்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் பகுதிகளில் இடிந்து விழும் நிலையிலுள்ள 66 கட்டுமானங்களை அப்புறப்படுத்த அவற்றின் உரிமையாளா்களுக்கு முன்னறிவிப்பு குறிப்பாணை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாநகராட்சி பகுதிகளுக்குள்பட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து ஆணையா் ந. ரவிச்சந்திரன், பொறியாளா் சுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலா் ஜெயக்குமாா் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.