பள்ளிக்கு நீதிமன்றம் சீல் - பெற்றோர்கள் போராட்டம்

மயிலாடுதுறையில் கடனை திருப்பி செலுத்தாத பள்ளியை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் பழைய ஒட்டு கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் படித்து வருவதாக குற்றம்சாட்டி பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-13 06:06 GMT

சாலை மறியல் 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம் பகுதியில் (கலைமகள் நர்சரி மற்றும் பிரைமரி) தனியார் பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 150 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளி நிர்வாகம் (சென்னை வர்த்தனா) தனியார் நிதி நிறுவனத்தின் ரூபாய் 3 கோடி கடன் பெற்று கடனை திருப்பி செலுத்தாததால் அந்நிறுவனத்தினர் மயிலாடுதுறை நீதிமன்றம் மூலம் 2 ஆம் தேதி காலையில் பள்ளியை இழுத்துமூடி பூட்டி சீல் வைத்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை அருகிலுள்ள ஒரு ஓட்டு கட்டிடத்தில் தற்காலிகமாக வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மாணவர்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இல்லாத பழைய ஓட்டு கட்டிடத்தில் மாணவர்கள் ஆபத்தான சூழலில் கல்வி பயின்று வருவதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர்கள் இன்று கீழப்பெரும்பள்ளம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூம்புகார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் புகார்மனு அளித்துள்ளனர். முதன்மை கல்வி அலுவலரை அனுப்பி பார்வையிட்டு மாற்று ஏற்பாடு செய்து தருவதாகவும், பள்ளி நிர்வாகத்தை அழைத்து விரைவில் பள்ளி திறக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

Tags:    

Similar News