சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

திருப்பத்தூர் நகர் பகுதியில் சுற்றி திரியும் மாடுகளால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-08 08:03 GMT

மாடுகள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்கள் பசு மாடுகள் மற்றும் கன்று குட்டிகள் உள்ளிட்டவையை அவிழ்த்து விட்டுவதன் காரணமாக முக்கிய சாலைகளிலின் நடுவே நின்று கொண்டும் படுத்து கொண்டும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாமல் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையும் ஏற்படுகிறதுஎன அச்சம் தெரிவிக்கின்றனர் இது எத்தனை முறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என நகரவாசிகள் ஆதகம் தெரிவிக்கின்றனர இதுகுறித்து திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகம் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கால்நடைகளை பிடித்துச் சென்று உரிமையாளர்கள் மீது அபராதம் செலுத்த வேண்டும் என திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News