கொடுக்கல் வாங்கலில் கொலை மிரட்டல் - வியாபாரி கைது

Update: 2023-11-14 08:25 GMT

பாலகிருஷ்ணன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், உலகாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (56) என்பவர் கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து தர்பூசணி பழம் மொத்தமாக கொள்முதல் செய்து பெங்களுர், கேரளா, கோயம்புத்தூர் போன்ற ஊர்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட வேட்டவலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ராஜேந்திரனை அணுகி தானும் பெங்களுரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், தன்னுடைய கடைக்கு தர்பூசணி பழம் அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளார். அதனால் ராஜேந்திரன் கடந்த 14.02.2022 முதல் 12.04.2022 ந்தேதி வரை 19 லோடு தர்பூசணி பழம் அனுப்பிவைத்துள்ளார். பாலகிருஷ்ணன் தர்பூசணி பழங்களை பெற்றுக்கொண்டு, அதற்கான பணத்தை ராஜேந்திரன் மகன் வரதராஜனின் வங்கி கணக்கிற்கு சிறுக சிறுக அனுப்பிவைத்துவிட்டு, நிலுவை தொகை ரூ.5,26,235 ஐ கொடுக்காமல் காலம் தாழ்த்தி பல காரணங்களை கூறி ஏமாற்றி வந்ததாகவும் , பின்னர், கடந்த 20.03.2023ம் தேதி பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று பணம் கேட்டதாகவும், அப்பொழுது ராஜேந்திரனை அசிங்கமாக திட்டி, பணத்தை கேட்டு வந்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி, தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவறுவதாகவும், இது சம்மந்தமாக ராஜேந்திரன திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயனிடம் புகார் மனு அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணனை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

Similar News