நாகையில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்கக் கூட்டம்

நாகப்பட்டினம் நடராசன் தமயேந்தி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூட்டம் நடந்தது.

Update: 2024-02-12 07:37 GMT

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ

அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல் லாத பள்ளி ஆசிரியர்கள் கூட் டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்கக் கூட்டம் நாகப்பட் டினம் நடராசன் தமயேந்தி உயர்நிலைப்பள்ளி வளாகத் தில் நடந்தது. மஞ்சக்கொல்லை குமரன் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

வெளிப் பாளையம் தூய அந்தோ ணியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ம ரியஜோசப், நாகூர் கௌதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மது அலி, நாகப்பட்டினம் சிஎஸ்ஐ பட்ட தாரி ஆசிரியர் விஜிமனோன் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகப்பட்டினம் எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ் பேசினார். அரசு உதவிபெ றும் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

புதுமைப்பெண் திட்டத் தின் கீழ் வழங்கும் உதவித் தொகையை வழங்க வேண் டும். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் காலை உணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான சலுகைகள் அனைத்தையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்கள் ரூஸோ, சுப்பிரமணியன், ஸ்ரீத ரன், சொக்கநாதன், ரத்தினம், பாலசண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகப் பட்டினம் தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிதுரை நன்றி கூறினார்

Tags:    

Similar News