வந்தவாசி அருகே கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீடம் இடிப்பு
வந்தவாசி அருகே கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீடம் இடித்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-24 14:34 GMT
வந்தவாசி காவல் நிலையம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்குவளைவேடு கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி (வயது 41) அவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக பீடம் அமைத்துள்ளார். இதைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீடத்தை இடித்துள்ளனர்.
மேலும் பிச்சாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பிச்சாண்டி வந்தவாசி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.