இந்திய பொது தொழிலாளர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
Update: 2024-01-09 07:44 GMT
ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய பொது தொழிலாளர்கள் பேரவை சார்பில், தொழிலாளர் நலத்துறையில் உள்ள குளறுபடிகளை கலைந்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய பொது தொழிலாளர்கள் பேரவையின் சார்பில் அதன் தலைவர் ஈஸ்வரன் தலைமையில்ஜனவரி 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட இணையதள சேவை முழுமையாக செயல்படும் வரை எவ்வித தடையும் இன்றி நலவாரிய பதிவு எண் வைத்திருக்கும் அனைவருக்கும் பணப்பயன் வழங்கிட வேண்டும், அனைத்து தொழிலாலர்களுக்கும் நடப்பாண்டு பொங்கல் போனஸ் ரூ.10,000 வழங்க வேண்டும், தொழிலாளர் நலத்துறையில் ஆன்லைன் திட்டத்தை கைவிட வேண்டும், மண்பாண்டம் கைவினை தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகையாக ரூ.5000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் அதிகாரிகளிடம் கொடுத்து சென்றனர்.