பட்டா வழங்க கோரி தர்ணா
நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்காமல் கால தாமதம் செய்வதை கண்டித்து பாதிக்கப்பட்ட 10 க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.;
Update: 2024-03-19 04:25 GMT
தர்ணா
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் எல்லைக்கு உட்பட்ட பொன்முடி நகரில் அரசு வழங்கிய இலவச மனை பட்டாவில் 22 நபர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து உடனடியாக பட்டா வழங்க கோரி பாதிக்கப்பட்ட 10 க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தற்போது தேர்தல் நேரம் என்பதால் இது போன்ற போராட்டங்களில் நீங்கள் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறி அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.