மண்ணச்சநல்லூரில் மன உளைச்சலில் புதுபெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள வடக்கு ஏரி மிஷின் தெருவில் மன உளைச்சல் காரணமாக புதுபெண் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-21 13:12 GMT

மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வடக்கு ஏரி மிஷின் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி 35 வயதான சத்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகின்றது.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் திருச்சி பி ஹெச் இ எல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் குடியிருக்கும் வாடகை வீட்டில் மாடியில் குடியிருக்கும் பெண்ணிடம் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதில் மன உளைச்சல் அடைந்த சத்யா வீட்டில் இருந்த பேனில் துப்பட்டாவல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News